| ADDED : ஜூலை 13, 2024 08:31 AM
மகுடஞ்சாவடி: இடங்கணசாலையில், இளம்பிள்ளை - சின்னப்பம்பட்டி சாலை, மணல் ஏரி பாலப்பகுதியில், ஒரு கார் வெகு நேரமாக கேட்பாரின்றி நிற்பதாக, மகுடஞ்சாவடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் பார்த்தபோது, காருக்குள், 25 வயது மதிக்கத்தக்க ஆணின் தலை, முகம் பகு-தியில் காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். கார் சாவி உள்ளே இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. கார் பழுதானது போன்று, முன்பற இன்ஜின் டோரை ஓபன் ஆக விட்டு, கொலையாளிகள் தப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார் விசாரிக்கின்றனர். தொடர்ந்து சேலம் எஸ்.பி., அருண்க-பிலன், சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, சம்பவ இடத்தில் விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: விசாரணையில் இறந்தவர், சின்னப்பம்பட்டி அருகே துட்டம்-பட்டியை சேர்ந்த கணேசன் மகன் பாரதிராஜா, 25, என தெரிந்தது. அவர் இளம்பிள்ளை, ஏழுமாத்தனுாரில் கார் பட்டறையில் மெக்-கானிக்காக வேலை செய்துள்ளார். பாப்பாப்பட்டியில் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் லில்லி மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொலை செய்யப்பட்டாரா என, விசா-ரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.