உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் மெக்கானிக் பலி

விபத்தில் மெக்கானிக் பலி

ஆத்துார்: ஆத்துார், கொத்தாம்பாடியை சேர்ந்த செல்வக்குமார் மகன் கிரிதரன், 26. பைக் மெக்கானிக். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு ஆத்துாரில் இருந்து, 'அப்பாச்சி' பைக்கில் சென்றுகொண்டிருந்தார். கொத்தாம்பாடி முனீஸ்வரன் கோவில் எதிரே சென்றபோது, பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த கிரிதரனை, மக்கள் மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியில் உயிரிழந்தார். ஆத்துார் ஊரக போலீசார், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை