உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர்திறப்பு 15,850 கனஅடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்திறப்பு 15,850 கனஅடியாக உயர்வு

மேட்டூர், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 6,316 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று காலை, 8:00 மணிக்கு வினாடிக்கு, 8,354 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, கடந்த, 24 முதல், வினாடிக்கு, 12,000 கனஅடி நீர் டெல்டா பாசனத்துக்கும், 850 கனஅடி நீர் கால்வாய் பாசனத்துக்கும் வெளியேற்றப்பட்டது.டெல்டா பாசன நீர்தேவை அதிகரிப்பால், நேற்று காலை, 8:00 மணி முதல், நீர்திறப்பு வினாடிக்கு, 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு வழக்கம்போல், 850 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. திறப்பை விட வரத்து குறைவாக உள்ளதால், நேற்று முன்தினம், 119.27 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 119 அடியாக சரிந்தது. அணை நீர் இருப்பு, 91.88 டி.எம்.சி.,யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை