உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை நீர் திறப்பு 600 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை நீர் திறப்பு 600 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்:மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் அடைந்ததால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 600 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று முன் தினம், 807 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட வினாடிக்கு, 500 கனஅடி நீர் நவ., 8ல், நிறுத்தப்பட்டு, காவிரி கரையோர குடிநீர் தேவைக்காக வினாடிக்கு, 250 கனஅடி நீர் திறக்கப்பட்டது.இந்நிலையில், 55 நாட்களுக்கு பின் குடிநீருக்கான நீர் திறப்பு நேற்று முன் தினம் காலை, 8:00 மணி முதல் வினாடிக்கு, 600 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நீர், அணை மின் நிலையம் மூலம் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனால் அணை மின் நிலையத்தில், 55 நாட்களுக்கு பின் மின் உற்பத்தி துவங்கியது. வினாடிக்கு, 5,000 கனஅடி நீர் திறக்கும் பட்சத்தில் அணை மின் நிலையத்தில், 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.நேற்று முன் தினம், 600 கனஅடி நீர் திறந்ததால் அணை மின் நிலையத்தில், 5 முதல், 7 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அணை நீர்மட்டம், 71.27 அடியாகவும், நீர் இருப்பு, 33.80 டி.எம்.சி.,யாகவும் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்