ஆரோக்யா மருத்துவமனை சேர்மனுக்கு அமைச்சர் பாராட்டு
சேலம்: சேலம் ஆரோக்யா மருத்துவமனையின், பாராமெடிக்கல் பாடப்பிரிவு மாணவ, மாணவியர், தொடர்ந்து, 3 ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம், 100 சதவீத தேர்ச்சியை பெற்று வருகின்-றனர். அதேபோல் நடப்பாண்டும் சிறந்த பங்களிப்பு வழங்கிய-தற்கு சென்னையில் நடந்த, இந்திய மருத்துவ சங்க பட்டமளிப்பு விழாவில் ஆரோக்யா மருத்துவமனையின், பாராமெடிக்கல் துறைக்கு விருது வழங்கப்பட்டது. விருதை பெற்ற, மருத்துவம-னையின் சேர்மன் ராணி வரதராஜூவுக்கு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்தார். மேலும் ஆரோக்யா மருத்துவமனையின் பாராமெடிக்கல் படிப்பு, கிராமப்-புற ஏழை மாணவ, மாணவியருக்கு உணவு, தங்குமிடத்துடன் இலவசமாக வழங்கப்படுகிறது.