உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கோவிலில் திருடும் மர்ம நபர்கள்

கோவிலில் திருடும் மர்ம நபர்கள்

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துாரில், புது பஸ் ஸ்டாண்ட் அருகில், வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. தினசரி வழிபாட்டுடன், புது பைக், மொபட், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு முதல் பூஜை செய்யும் கோவிலாகவும் உள்ளது.வழக்கமாக மதியம், 12:00 மணிக்கு மேல், நடை சாத்திய பிறகு, கருவறை கதவை மட்டும் தாழிட்டு செல்வது வழக்கம். அவ்வாறு தாழிட்ட கதவுகளை திறந்து, பக்தர்கள் காணிக்கையாக போடும் காசு, பணத்தை மர்ம நபர்கள் திருடி வந்துள்ளனர். காணிக்கையை திருடும் காட்சி, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி-யுள்ளது. இதில் ஈடுபட்ட இருவரை, ஆத்துார் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை