உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேசிய வாள் சண்டை; சேலம் வீரர்கள் அசத்தல்

தேசிய வாள் சண்டை; சேலம் வீரர்கள் அசத்தல்

சேலம் : ஒடிசா மாநிலம், கடாக் மாவட்டத்தில் தேசிய அளவில் வாள்சண்டை போட்டி, சமீபத்தில் நடந்தது. 10, 12 வயது பிரிவில் சேலம் வீரர், வீராங்கனைகள் மூவர் வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர். குளுனி வித்யா நிகேதன் பள்ளி மாணவர் லக் ஷன், மாணவி வர்ஷினி, ராயல் பார்க் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர் நவீன் ஆகியோர் மூன்றாம் இடம் பெற்று, தலா ஒரு வெண்கல பதக்கம் பெற்று, தேசிய அளவில் சாதனை படைத்துள்ளனர்.சேலம் மாவட்ட வாள்சண்டை சங்க தலைவர் கோசலம், செயலர் வஸ்தாத் கிருஷ்ணன், பயிற்சியாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் சாதனை வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை