உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புதுமண தம்பதிக்குள் தகராறு கிணற்றில் குதித்து தற்கொலை

புதுமண தம்பதிக்குள் தகராறு கிணற்றில் குதித்து தற்கொலை

வாழப்பாடி:சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த துக்கியம்பாளையம் அருகே மாரியம்மன் புதுாரை சேர்ந்த கதிர்வேல் மகன் அருள் முருகன், 25, கொத்தனார். இவருக்கும், சந்திரபிள்ளைவலசை சேர்ந்த சந்தோஷ் மகள் அபிராமி, 19, என்பவருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் திருமணமானது.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:30 மணிக்கு கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த அபிராமி, அருகில் இருந்த விவசாய கிணற்றில் குதித்தார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர் அருள் முருகனும் பாய்ந்து சென்று, மனைவியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். வாழப்பாடி போலீசார், இருவர் உடலையும் மீட்டனர்.அபிராமி தாய் மாயா அளித்த புகார்படி, வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.தற்கொலை செய்து கொண்ட தம்பதிக்கு, திருமணமாகி இரு மாதங்களே ஆனதால், ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ