உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராசிபுரத்துக்கு பஸ் இல்லை: ஆத்துாரில் பயணியர் அவதி

ராசிபுரத்துக்கு பஸ் இல்லை: ஆத்துாரில் பயணியர் அவதி

ஆத்துார் : ராசிபுரத்துக்கு பஸ் இல்லாததால், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில், ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் பயணியர் காத்தி-ருந்து அவதிக்குள்ளாகினர்.சேலம் மாவட்டம் ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ராசி-புரம், நாமக்கல், ஈரோடு பகுதிகளுக்கு, ஆத்துார், நாமக்கல், ராசி-புரம் கிளை பணிமனைகள் மூலம், 'மப்சல்' பஸ்கள் இயக்கப்படு-கின்றன. நேற்று இரவு, 8:00 மணி முதல் ஆத்துாரில் இருந்து ராசிபுரம் - நாமக்கல் தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்பட-வில்லை. இதனால், 100க்கும் மேற்பட்ட பயணியர், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் காத்து கிடந்து சிரமத்துக்கு ஆளாகினர். தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் உள்ள நேர கண்காணிப்பு அலுவலகத்தை முற்-றுகையிட்டு, போக்குவரத்து அலுவலர்களிடம், பயணியர் வாக்கு-வாதம் செய்தனர். பின் இரவு, 9:30 மணிக்கு, ஆத்துார் - ராசிபு-ரத்துக்கு மப்சல் பஸ் வந்தது. அதில் பயணியர், இடநெருடிக்கடியில் சென்றனர்.வேறு தடத்தில் இயக்கம்இதுகுறித்து பயணியர் கூறியதாவது: ஆத்துார் - ராசிபுரம், நாமக்கல் தடத்தில் இரவு, 8:00 மணி, 8:30 மணிக்கு இயக்கப்-படும் இரு பஸ்களை, கள்ளக்குறிச்சிக்கு சிறப்பு பஸ்களாக இயக்கிவிட்டனர். இதனால் ராசிபுரம், மெட்டாலா, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதி முதியோர், பெண்கள், பலர் குழந்தைகளுடன், ஒன்றரை மணி நேரம் காத்துக்-கிடந்தோம். பஸ் குறித்து கேட்ட பின், 9:40 மணிக்கு இயக்கப்-பட்டது. ஞாயிறு, முகூர்த்த நாட்களில் இதுபோன்று பஸ்களை வேறு தடத்தில் இயக்குவதால் அவதிப்படுகிறோம். வழித்தட பஸ்களை வழக்கமாக இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.குழப்பம்ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊனத்துாருக்கு டவுன் பஸ்(தடம் எண்: 12) இயக்கப்படுகிறது. அதில் டிஜிட்டல் பெயர் பலகை உள்ளது. நேற்று மதியம், 2:30 மணிக்கு ஆத்துார் வந்தபோது பெயர் பலகையில் ஊனத்துார் வழி - தலைவாசல், சிறுவாச்சூர் என குறிப்பிடுவதற்கு பதில், 'கள்ளக்குறிச்சி வழி பள்ளிபாளையம்' என தவறுதலாக இருந்தது. இதனால் பயணியர் குழப்பம் அடைந்தனர். ஒருவழியாக டிரைவரிடம் கூற, பின் பெயர் பலகையில் ஊர் பெயர் மாறி இருப்பது தெரிந்து சரிசெய்யப்பட்டதால் பயணியர் ஏறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை