உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீரில் கழிவுநீர் கலப்பை சீரமைக்க செவிலிய கல்லுாரிக்கு நோட்டீஸ்

குடிநீரில் கழிவுநீர் கலப்பை சீரமைக்க செவிலிய கல்லுாரிக்கு நோட்டீஸ்

அயோத்தியாப்பட்டணம் : சேலம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள தனியார் செவிலிய கல்லுாரியில், விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவியர் பலருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் கல்லுாரியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து புகாரால், அதிகாரிகள் மாணவியரை மீட்டு, நேற்று முன்தினம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து சுகாதாரத்துறையினர், உணவு பாதுகாப்பு துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள், கல்லுாரியில் சோதனை நடத்தினர். கேன்டீன் தற்காலிகமாக மூடப்பட்டது. நேற்று தனியார் செவிலிய கல்லுாரி முதல்வர் அன்பரசியிடம், ஆத்துார் மாவட்ட சுகாதார அலுவலர் யோகானந்த் உத்தரவுப்படி காரிப்பட்டி வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் சுசீந்திரன், 'நோட்டீஸ்' வழங்கினார். அதில், 'கழிவுநீர் குடிநீரில் கலக்கிறது. இதனால் மாணவியருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கலாம். கழிவுநீர், குடிநீரில் கலப்பதை சீரமைக்க வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி