உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓமலூர் ஜி.ஹெச்., டாக்டரிடம் நான்காம் முறையாக விசாரணை

ஓமலூர் ஜி.ஹெச்., டாக்டரிடம் நான்காம் முறையாக விசாரணை

ஓமலுார்: சேலம் மாவட்டம் ஓமலுார் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் (சி.எம்.ஓ.,) நாக புஷ்பராணி. மருத்துவமனை சமூக பங்களிப்பு மூலம் பல்வேறு நிறுவனங்கள், பல லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளன. தவிர அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நிதி மூலம் மருத்துவமனைக்கு தளவாட பொருட்கள் வாங்கப்பட்டுள்ளன.நாகபுஷ்பராணி பொறுப்பேற்ற பின், தளவாட பொருட்கள் வாங்கியதில், கமிஷனுக்காக கூடுதல் நிதி செலவு செய்யப்பட்டதாக, மருத்துவ துறைக்கு புகார் சென்றது. இதுதொடர்பாக ஏற்கனவே மூன்று முறை விசாரணை நடந்தது. இந்நிலையில் கோவை மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணி இணை இயக்குனர் ராஜசேகரன், கடந்த, 29ல் ஓமலுார் மருத்துவமனையில் நாகபுஷ்பராணியிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மருத்துவர், செவிலியர், அலுவலக பணியாளர், நோயாளிகளிடம் விசாரித்து, ஆவணங்களை பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்