மேலும் செய்திகள்
தினந்தோறும் அதிர்ச்சி தரும் ரூபாய் மதிப்பு சரிவு
28-Dec-2024
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில் 58 பைசா சரிந்து, 86.62 ரூபாயை எட்டியது. இதுவே, கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதிக்கு பிறகு ஒரே நாளில் கண்ட அதிகபட்ச சரிவாகும். அப்போது ரூபாயின் மதிப்பு 68 பைசா சரிந்தது. அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் எதிர்-பார்ப்பை காட்டிலும் சிறப்பாக இருந்த காரணத்தால் டாலர் மேலும் வலுப்பெற்றது. இதையடுத்து, அமெரிக்க கடன் பத்திர வருவாயும் கடந்த 15 மாத உச்சத்தை எட்டியுள்ளது. இதன் கார-ணமாக, அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய சந்தைகளிலிருந்து தொடர்ந்து அதிக அளவிலான முதலீடுகளை திரும்பப் பெற்று வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் ரஷ்யாவின் மீது அமெ-ரிக்கா கூடுதல் பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. இத-னால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்-றுக்கு 81 டாலரை நெருங்கியது. இந்தியா அதிக அளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதால், இதுவும் ரூபாயின் மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், ரூபாயின் மதிப்பை மீட்க, ரிசர்வ் வங்கி இனி டாலரை விற்க முற்படாது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், தற்போதைக்கு ரிசர்வ் வங்கி, ரூபாயை அதன் போக்கிலேயே விட்டுவிடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
28-Dec-2024