உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜலகண்டாபுரத்தில் பா.ஜ., அலுவலகம் திறப்பு

ஜலகண்டாபுரத்தில் பா.ஜ., அலுவலகம் திறப்பு

இடைப்பாடி : இடைப்பாடி சட்டசபை தொகுதியின், பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதனை மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் திறந்து வைத்தார்.சேலம் மேற்கு மாவட்ட பா.ஜ.,வின் இடைப்பாடி சட்டசபை தொகுதி அலுவலகம் திறப்பு விழா நேற்று ஜலகண்டாபுரத்தில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலர் ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் ஐயப்பராஜ் வரவேற்றார். இடைப்பாடி சட்டசபை தொகுதி அலுவலகத்தை மாநில துணைத் தலைவர் ராமலிங்கம் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுதிர்முருகன், மாநில கூட்டுறவு பிரிவு தலைவர் வெங்கடாசலம், அண்ணாதுரை, ஜெயராமன், திருமூர்த்தி, நித்தியகலா, தினேஷ்குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நங்கவள்ளி தெற்கு ஒன்றிய தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை