முக்கனி பூங்கா திறப்பு
முக்கனி பூங்கா திறப்புசேலம், செப். 29-சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலம், 37வது வார்டு செல்வ நகரில் முக்கனி பூங்காவை, மேயர் ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார். அதில் மா, பலா, வாழை, சீதா, நெல்லி உள்ளிட்ட, 100 பழச்செடிகள் நடப்பட்டு கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாநகராட்சி காலி இடங்களில் பழக்கன்றுகள், மரங்கள் நட திட்டமிட்டுள்ளதாக, மேயர் தெரிவித்தார். கமிஷனர் ரஞ்ஜீத்சிங், மண்டல குழு தலைவர் தனசேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.