உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உடலை புதைக்க எதிர்ப்பு; தாசில்தார் பேச்சில் சமரசம்

உடலை புதைக்க எதிர்ப்பு; தாசில்தார் பேச்சில் சமரசம்

மேட்டூர்: கொளத்துார், காவேரிபுரம் ஊராட்சி சத்யா நகரில், ஒரே பிரிவை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் யாரும் இறந்தால், அருகே உள்ள கிழக்கு காவேரிபுரம் ஓடை கரையோர மயானத்தில் அடக்கம் செய்வர். நேற்று காலை, அப்பகுதி மாற்றுத்திறனாளி ரியாஷ்கான், 25, உடல்நலக்குறைவால் இறந்தார்.அவர்களது மத வழக்கப்படி அடக்கம் செய்ய, உடலை, கிழக்கு காவேரிபுரத்துக்கு எடுத்துச்சென்றனர். அப்போது மயானம் அருகே வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை அறிந்து, அங்கு சென்ற மேட்டூர் தாசில்தார் ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், கொளத்துார் போலீசார், இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தினர். அப்போது எதிர்ப்பு தெரிவித்த மக்கள், 'மயானம் அருகே போடப்பட்டுள்ள போர்வெல் தண்ணீரை, எங்கள் பகுதிக்கு வழங்க வேண்டும். விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்கிய இடத்தில் இருந்து சற்று தொலைவில் அடக்கம் செய்ய வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். இதை இரு தரப்பினரும் ஏற்றனர். பின் மதியம், 2:30 மணிக்கு, இளைஞர் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி