திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கட்டுரை போட்டி நடத்த உத்தரவு
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாகட்டுரை போட்டி நடத்த உத்தரவுசேலம், நவ. 21-தமிழக அரசு சார்பில், கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் வெள்ளி விழாவை, ஜனவரி முதல் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருவள்ளுவர் சிலை வரலாறு, சிறப்பை மாணவர்கள் அறிய, கட்டுரை போட்டிகள் நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி அளவில் போட்டிகள், வரும், 25ல் வட்டாரம், 27ல் மாவட்ட அளவில் போட்டிகள் நடக்க உள்ளன. இதில், 'அய்யன் வள்ளுவரின் அடி தொடர சூளுரைப்போம்' 'எனக்கு பிடித்த திருக்குறள்' தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. வட்டார, மாவட்ட கட்டுரை போட்டிகளுக்கு பொறுப்பாசிரியர் நியமித்து, தேர்வு பெற்ற மாணவ, மாணவியரை அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.