உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரிசி கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு

அரிசி கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு

சேலம்: கோவை மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில், சேலம் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை நடந்தது.அப்போது அவர், அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது:அரிசி கடத்தும் போது, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நீதிமன்ற அனுமதியுடன் விற்பனை செய்ய வேண்டும். ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அரிசி கடத்தல் வழக்கில் கைதானதுமே, உடனடியாக நீதிமன்-றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணைக்கு கொண்டு வந்து, கடத்துபவர்களுக்கு கடும் தண்டனை வாங்கி தர வேண்டும். ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ