உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வு டிரைவர் வீட்டில் 50 பவுன் திருட்டு வெளிமாநிலத்தில் பதுங்கியவர் சிக்கினார்

ஓய்வு டிரைவர் வீட்டில் 50 பவுன் திருட்டு வெளிமாநிலத்தில் பதுங்கியவர் சிக்கினார்

அயோத்தியாப்பட்டணம், ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில், 50 பவுன் நகைகள் திருடிய விவகாரத்தில், வெளிமாநிலத்தில் பதுங்கி இருந்த ஒருவரை பிடித்து, ஸ்டேஷனில் வைத்து போலீசார் விசாரிக்கின்றனர். அவரது கூட்டாளியை பிடிக்க, போலீசார் கரூர் சென்றுள்ளனர்.சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்தவர் வெங்கடாசலம், 64. ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி செண்பகவடிவு, 58. இவரது மாமியார் இந்திராணி, 82. இவர்கள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். கடந்த, 1 காலை, இவர்கள் திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மறுநாள் காலை, 10:30 மணிக்கு வீடு திரும்பினர். அப்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 50 பவுன் நகைகள், 50,000 ரூபாய், வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து, 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சேலம் மாவட்டம் ஆத்துார், அம்மம்பாளையத்தை சேர்ந்த ஒருவரும், அவருடன் ஏற்கனவே சிறையில் பழக்கமான நண்பரும் சேர்ந்து, வெங்கடாசலம் வீட்டில் திருடியது தெரிந்தது. இருவர் மீதும் பல்வேறு மாவட்டங்களில் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அம்மம்பாளையத்தை சேர்ந்தவர், வெளி மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார், அங்கு சென்று அவரை பிடித்து, காரிப்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர். தொடர்ந்து, கரூர் வாலிபரை பிடிக்க சென்றுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை