உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தவறி விழுந்து பெயின்டர் பலி

தவறி விழுந்து பெயின்டர் பலி

சேலம், சேலம், மரவனேரி கோர்ட் ரோடு காலனியை சேர்ந்தவர் வெங்கடாஜலம், 63, பெயின்டர், கடந்த, 16ல் பொன்னம்மாபேட்டை சக்தி நகர் பகுதியில், தனசேகர் என்பவரது புதிய வீட்டிற்கு, பெயின்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, 4 அடி உயர நாற்காலியில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, அங்கிருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை