உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பைக் மோதி பெயின்டர் பலி

பைக் மோதி பெயின்டர் பலி

பனமரத்துப்பட்டி : மல்லுார் அருகே வாணியம்பாடியை சேர்ந்த ராஜ்குமார், 37, பெயின்டர். நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு மொபட்டில் பாலம்பட்டியிலிருந்து வாணியம்பாடிக்கு சென்றார். அப்போது, எதிரில் வந்த ஹீரோ பைக், மொபட் மீது மோதியதில் காயமடைந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று காலை உயிரிழந்தார். ஹீரோ பைக் ஓட்டி வந்த விக்னேஷ், 25, மல்லுார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ