உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரேஷன் ஊழியருக்கு பளார்; முன்னாள் தலைவர் கைது

ரேஷன் ஊழியருக்கு பளார்; முன்னாள் தலைவர் கைது

ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா வி.கொங்கரப்பட்டியை சேர்ந்தவர் சந்-திரன், 46. கே.என்.புதுார் கூட்டுறவு ரேஷன் கடை விற்பனையாள-ரான இவர், நேற்று முன்தினம் கடையை திறக்க சென்றார். அப்-போது, அதே கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஜெயக்குமார், 'ஆண்டு தணிக்கைக்கு ஆடிட்டருக்கு, 5,000 ரூபாய் வேண்டும்' என கேட்டார். அதற்கு சந்திரன், 'உங்கள் பதவிக்காலம் முடிந்து-விட்டது. எதற்கு பணம் கேட்கிறீர்கள்' என கேள்வி எழுப்பினார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து சந்திரன், தீவட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'என் கன்னத்தில் ஜெயக்குமார் அறைந்தார். மக்கள் முன்னிலையில் மோசமாக பேசினார்' என கூறியிருந்தார். மேலும் பதிவு செய்யப்பட்ட ஆடியோ ஆதா-ரத்தை ஒப்படைத்தார். இதையடுத்து ஜெயக்குமாரை நேற்று போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை