உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி

நாளை அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி

சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களில், கடந்த, 19ல், திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடங்கியது. 20 முதல், பகல் பத்து உற்சவம் தொடங்கி நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான, 'பரமபத வாசல்', நாளை காலை, 5:00 மணிக்கு திறக்கப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், அறங்காவலர்கள், பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், பகல் பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று மாலை, சவுந்தரராஜர் நாச்சியார் திருக்கோலத்தில், 'மோகினி' அலங்காரத்தில் வீதி உலா வருகிறார். நாளை அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். பட்டைக்கோவில் வரதராஜர், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், வெங்கடாஜலபதி உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும், நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது.காடையாம்பட்டி தாலுகா சின்னதிருப்பதியில் உள்ள வெங்கட்ரமணசுவாமி கோவிலில் நாளை அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்க உள்ளது. அதற்காக நேற்று சொர்க்கவாசல் வழியை அலங்காரம் செய்யும் பணி நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=s12mrppn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை