உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பஸ்சில் ஏற்றாமல் அடாவடி வாழப்பாடி பயணியர் அவதி

பஸ்சில் ஏற்றாமல் அடாவடி வாழப்பாடி பயணியர் அவதி

வாழப்பாடி, சேலம் மற்றும் ஆத்துாரில் இருந்து செல்லும் சில அரசு, தனியார் பஸ்களில், வாழப்பாடி செல்லும் பயணியரை ஏற்ற, கண்டக்டர்கள் மறுக்கின்றனர். ஒரு வேளை ஏற்றினாலும், பஸ் புறப்படும்போது மட்டும் ஏறவேண்டும் என அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், சேலம் புது பஸ் ஸ்டாண்டில், தனியார் பஸ் கண்டக்டர்கள், 'வாழப்பாடிக்குள் பஸ் செல்லாது' என கூறி, பயணிரை ஏற்ற மறுத்துள்ளார். இதனால் வாழப்பாடியை சேர்ந்த பயணியர், அந்த பஸ் கண்டக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வரகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாழப்பாடி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !