உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நிலுவை வழக்கு: முதன்மை நீதிபதி அறிவுரை

நிலுவை வழக்கு: முதன்மை நீதிபதி அறிவுரை

சங்ககிரி, நவ. 20-சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, சங்ககிரி சார்பு நீதிமன்றத்தில் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிலுவையில் உள்ள வழக்கு கோப்புகள், நீதிமன்றத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தொகை விபரங்கள், ஆவண காப்பக அறையில் உள்ள பதிவேடுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். சார்பு நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் உடனிருந்தார்.முன்னதாக முதன்மை நீதிபதியை, சங்ககிரி ஜே.எம்., 1 நீதிமன்ற நீதிபதி பாபு, முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற அரசு வக்கீல் வேலுசாமி, சார்பு நீதிமன்ற அரசு கூடுதல் உதவி வக்கீல் கிறிஸ்டோபர், மாவட்ட உரிமையில் நீதிமன்ற அரசு வக்கீல் அருள்பிரகாஷ் வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ