உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இயற்கை வேளாண் சந்தை தொடக்கம் ஆர்வமாக காய்கறி வாங்கிய மக்கள்

இயற்கை வேளாண் சந்தை தொடக்கம் ஆர்வமாக காய்கறி வாங்கிய மக்கள்

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார் பகுதி இயற்கை விவசாயிகள் சார்பில், விநாயகபுரத்தில், இயற்கை வேளாண் சந்தை நேற்று தொடங்கப்பட்டது. அங்கு இயற்கை முறையில் தோட்டம், மாடித்தோட்டங்களில் வளர்க்கப்படும் காய்கறி மட்டும், அறு-வடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதேபோல் இயற்கை உழவர்கள், பழமையான மரபு ரக அரிசிகள், காய்கறி, கிழங்கு, கீரைகள், பழங்கள், சிறுதானிய தின்பண்டங்கள், மூலிகை பொருட்கள், எண்ணெய் வகைகள், தேன் சூப் உள்-ளிட்ட பல்வேறு வகை உணவுகளை, விற்பனைக்கு வைத்திருந்-தனர்.காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை, மக்கள் ஆர்வமாக வாங்கினர். தவிர காய்கறி, சிறுதானிய நன்மைகள் குறித்து, மக்க-ளுக்கு எடுத்துரைத்தனர். இந்த சந்தை, சனிதோறும் காலை, 6:00 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கும் என, இயற்கை விவ-சாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை