உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மண் கொட்டி சமன்படுத்தும் மக்கள்

மண் கொட்டி சமன்படுத்தும் மக்கள்

ஏற்காடு, ஜன. 4-ஏற்காடு செல்ல, கொண்டப்பநாயக்கன்பட்டி; குப்பனுார்; கொளகூர் என, 3 வழிகள் உள்ளன. இதில் கொளகூர் வழியே தர்மபுரி, கிருஷ்ணகிரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். ஆனால் இச்சாலை மிகவும் மோசமடைந்ததால், சுற்றுலா பயணியர், கரடியூரை சுற்றியுள்ள, 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.இந்நிலையில், கரடியூர், கொளகூர் உள்பட, 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கடந்த டிச., 30ல், ஏற்காடு பி.டி.ஓ.,விடம் மனு அளித்தனர். அதில், 'புத்துார் பிரிவு சாலை முதல் கரடியூர், கொளகூர், சொரக்காப்பட்டி வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இச்சாலையை நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்து, விரிவாக்கம் செய்து சீரமைத்தால், கிராம மக்கள், சுற்றுலா பயணியருக்கு வசதியாக இருக்கும்' என கூறியிருந்தனர்.அரசு, அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அச்சாலையை சுற்றியுள்ள கிராம மக்கள், நேற்று காலை, சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கினர். முதலில் குண்டும் குழியுமாக உள்ள இடங்களில் மண், ஜல்லிகளால் நிரப்பி சீரமைக்கும் பணியை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை