உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரசாயனம் கலந்து ஜவ்வரிசி தயாரித்தால் ஆலை உரிமம் ரத்து

ரசாயனம் கலந்து ஜவ்வரிசி தயாரித்தால் ஆலை உரிமம் ரத்து

சேலம்: சேலம் மாவட்டத்தில், 150க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அனுமதிக்கப்படாத வேதிப்பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி, பாதுகாப்பற்ற உணவாக கருதப்படுவதால், சட்டப்படி, 3 மாத சிறையுடன், 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கக்கூடிய குற்றம். மேலும் சுகாதாரமற்ற நீர் பயன்படுத்துவதும் ஆய்வில் அறியப்படுகிறது. ஜவ்வரிசி உரிமையாளர்கள், மக்காச்சோள மாவு கலப்பதாகவும் புகார்கள் வருகின்றன. 'சேகோ' என பெயரிடப்பட்ட உணவுப்பொருட்களில் மக்காச்சோள மாவு கலந்து, 'சேகோ' என விற்பதும் குற்றமாக கருதி, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். உணவு பொருட்களை பொட்டலமிட்டு விற்கும்போது, அதன் மீது முழு விபரம் அடங்கிய சீட்டு அச்சிட்டிருக்க வேண்டும். விற்பனையாளரும், அத்தகைய விபரம் கொண்ட உணவு பொருட்களையே விற்க வேண்டும். தவறினால், உணவு பாதுகாப்புத்துறையால் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஜவ்வரிசி உற்பத்தியாளர், விற்பனையாளர், உணவு பாதுகாப்புத்துறை வழங்கும் உரிமம் பெற்று, உணவு வணிகம் செய்ய வேண்டும். ஜவ்வரிசி தயாரிப்பில் வேதிப்பொருட்கள் பயன்படுத்தினால், ஜவ்வரிசி ஆலை உரிமம் ரத்து செய்யப்படும் என, கலெக்டர் பிருந்தாதேவி எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை