சேலம்: சேலம், ஸ்ரீகோகுலம் செவிலியர் கல்லுாரியில் முதலாண்டு மாணவர்களுக்கு, உறுதிமொழி ஏற்பு விழா நடந்தது. மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி வாழ்த்துடன், மகப்பேறு மருத்துவர் செல்லம்மாள் தலைமை வகித்தார். பேராசிரியர் சரவணன் வரவேற்றார்.செவிலியர் சங்க, தமிழ்நாடு கிளை செயலர், விக்னேஷ் செவிலியர் கல்லுாரி முதல்வர் விஜயலட்சுமி, கோகுலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழரசி, ஸ்ரீகோகுலம் மருத்துவமனை செவிலிய கண்காணிப்பாளர்கள் முத்து, அச்சம்மா இணைந்து, மாணவ, மாணவியர் ஏந்திய விளக்குகளை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து விஜயலட்சுமி, செவிலிய சேவை குறித்தும், அதன் சிறப்பு, முக்கியத்துவம் குறித்தும் பேசினார்.கைவிளக்கோடு அணிவகுத்த மாணவ, மாணவியருக்கு, தமிழரசி, புளோரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி வாசிக்க, மாணவ, மாணவியர் அதை திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றனர். இதில், 2023 - 24ம் ஆண்டு இளங்கலை செவிலிய படிப்பு, முதலாண்டு மாணவ, மாணவியர், 100 பேர், முதலாண்டு செவிலிய பட்டப்படிப்பு மாணவ, மாணவியர், 25 பேர், புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவுகூர்ந்து உறுதி மொழி ஏற்றனர். துணை பேராசிரியர் சத்யா, கல்லுாரியை சேர்ந்த பிற பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.