சொத்து, தொழில் வரி உயர்வை திரும்ப பெற பா.ம.க., பொதுக்குழுவில் வலியுறுத்தல்
சேலம், நகர்புற உள்ளாட்சி பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட சொத்து வரி, தொழில் வரி உயர்வை திரும்ப பெறுதல் உள்பட, 11 தீர்மானங்கள், பா.ம.க., பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.சேலத்தில், ஒருங்கிணைந்த மாவட்ட, பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:சேலம் மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளிலும், குறைந்தது ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்த்தல்; மேட்டூர் அணை உபரிநீரால், 58 ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் நிரப்பப்படுவதால், 100 ஏரிகளுக்கும் விரிவுபடுத்தல்;பனமரத்துப்பட்டி ஏரியை சீரமைத்து, சேலம் மாநகர குடிநீர் தேவைக்கு நடவடிக்கை எடுத்தல்; இரும்பாலையில் கையகப்படுத்தி, பயன்படுத்தாமல் உள்ள நிலங்களை, உரியவர்களுக்கே திரும்ப வழங்குதல்; இரும்பாலை தளவாட மையம் அமைக்க நடவடிக்கை எடுத்தல்.சேலம் மாவட்டத்தில் வெள்ளி, ஜவுளி மற்றும் கயிறு திரிக்கும் தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல்; சேலம் மாவட்டத்தில் மலர்களில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலை அமைத்தல்; மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட சொத்து வரி, தொழில் வரி உயர்வை திரும்பப்பெறுதல்; சேலத்தில் பாதாள சாக்கடை பணியை விரைந்து நிறைவேற்றி, சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்தல்;சேலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, வெளிவட்ட சாலை அமைக்கும் திட்டப்பணிகளை விரைந்து தொடங்குதல்; இந்திய விடுதலைக்கு பெரும் பங்காற்றிய சேலம் அர்த்தநாரீச வர்மாவின் பெயரை, சேலம் விமான நிலையத்துக்கு சூட்டுதல் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.