உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துாத்துக்குடியில் திருடியவரை சேலத்தில் பிடித்தது போலீஸ்

துாத்துக்குடியில் திருடியவரை சேலத்தில் பிடித்தது போலீஸ்

சேலம்:துாத்துக்குடியில் வேலை பார்த்த கடையில் 37 சவரன் தங்க கட்டிகளை திருடி தப்பிய ஊழியரை, சேலத்தில் ரயில்வே போலீசார் பிடித்தனர். மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் விகாஷ். துாத்துக்குடியில் பழைய நகைகளை உருக்கி, கட்டியாக்கி விற்கும் தொழில் செய்கிறார். இவரிடம், மஹாராஷ்டிராவை சேர்ந்த மாற்றுத்திறனாளி விட்டல், 35, கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்த நிலையில், நேற்று முன்தினம் கடையில் இருந்து மாயமானார். சந்தேகமடைந்த விகாஷ், கடையில் சோதனை செய்தபோது, 37.25 சவரன் தங்க கட்டி, பணம் காணாமல் போனது தெரிந்தது. புகாரில், போலீசார் விசாரித்தனர். திருநெல்வேலி - தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில், விட்டல் ஏறிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து, சேலம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தரப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, ரயில் சேலத்தை அடைந்தது. பொதுப்பெட்டியில் பயணித்த விட்டலை போலீசார் பிடித்தனர். அவரிடமிருந்து தங்க கட்டி மற்றும் 43,300 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி