உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காவலர் தினம் கொண்டாட்டம்

காவலர் தினம் கொண்டாட்டம்

சேலம் :மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் உதயமான நாளான, செப்., 6ஐ, காவலர் தினமாக கொண்டாட, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. காவலர் நினைவு ஸ்துாபிக்கு, கமிஷனர் அனில்குமார் கிரி, மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது தலைமையில் போலீசார், காவலர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். துணை கமிஷனர்கள் கீதா, கேல்கர் சுப்ரமண்ய பாலச்சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதேபோல் ஏற்காடு, ஒண்டிக்கடை புறக்காவல் நிலையத்தில் காவலர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் மக்களுக்கு பாட்டு, நடனம், திருக்குறள் வாசித்தல் போட்டிகள் நடத்தி, பரிசுகள்வழங்கப்பட்டன. தொடர்ந்து சேலம் மாவட்ட போலீஸ் துறையினர் சார்பில், தமிழக போலீஸ் துறையினர் பயன்படுத்தும் ஆயுத கண்காட்சிநடந்தது. சேலம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் சந்த் மீனா தொடங்கி வைத்தார். அதில் தமிழக போலீஸ் துறையினர் பயன்படுத்தும், ஏ.கே., 47, பம்ப் ஆக்சன், இன்சாஸ், 303, மெஷின் கன் உள்ளிட்ட பல்வேறு துப்பாக்கிகள், அதில் பயன்படுத்தும் தோட்டாக்கள் வைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர் கண்டுகளித்தனர்.வாழப்பாடி, ஏத்தாப்பூர், கருமந்துறை, கரியகோயில், வாழப்பாடி மகளிர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசார், முத்தம்பட்டியில், டி.எஸ்.பி., சுரேஷ்குமார் தலைமையில் காவலர் தினத்தை கொண்டாடினர். அப்போது பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற போலீசார், அவரது குடும்பத்தினர், குழந்தைகளுக்கு, டி.எஸ்.பி., பரிசு வழங்கினார். இரவு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை