உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாசு கட்டுப்பாடு தின விழா

மாசு கட்டுப்பாடு தின விழா

ஓமலுார்: ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாசுகட்டுப்பாடு தினம் விழா நேற்று கொண்டாடினர். 1984, டிச.,2ல், போபால் விஷவாயு தாக்கி உயிரிழந்த-வர்களின் நினைவாக ஆண்டுதோறும் தேசிய மாசுகட்டுப்பாடு தினமான அனுசரிக்கப்படுகிறது. முத்துநாயக்கன்பட்டி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமையில் நடந்த விழாவில் பேச்சு, கட்டுரை மற்றும் விழிப்பு-ணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பவுன்ராஜ், சேலம் ஏர்போர்ட் லயன்ஸ் சங்க தலைவர் பூபதி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை