உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 500 கிடா, 1,000 கோழி வெட்டி முனீஸ்வரனுக்கு பொங்கல்

500 கிடா, 1,000 கோழி வெட்டி முனீஸ்வரனுக்கு பொங்கல்

ஆத்துார்: ஆத்துார் அருகே கொத்தாம்பாடி முனீஸ்வரன் கோவிலில், கடந்த, 9ல், 32வது ஆண்டு ஆடி திருவிழா சக்தி அழைத்தலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 முதல் நேற்று மாலை, 5:00 மணி வரை, பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேர்த்திக்கடனுக்கு, 500 ஆட்டு கிடா, 1,000 கோழிகள் வெட்டப்பட்டன. பின் அன்னதானம் வழங்கப்பட்டது. புஷ்ப அலங்காரத்தில், 21 அடி உயர முனீஸ்வரன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சூளை முனியப்பன்கொங்கணாபுரம் அருகே பணிக்கனுாரில் சூளை முனியப்பன் கோவில் உள்ளது. அங்கு ஆடி பொங்கல் திருவிழாவையொட்டி அங்குள்ள இரு முனியப்பன் சுவாமிகள், கன்னிமார், முன்னுடையான் சுயம்பு சுவாமிகளுக்கு பால், தயிர், திருநீறு, திருமஞ்சனம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை