உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அஞ்சல் காப்பீடு முகவர்: வரும் 8ல் நேர்காணல்

அஞ்சல் காப்பீடு முகவர்: வரும் 8ல் நேர்காணல்

அஞ்சல் காப்பீடு முகவர்: வரும் 8ல் நேர்காணல்சேலம், நவ. 1-சேலம் அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிக்கை:சேலம் அஞ்சல் கிழக்கு கோட்டத்தில் வரும், 8 காலை, 11:00 மணிக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கு முகவர்களை தேர்ந்தெடுக்க நேர்காணல் நடக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள், சேலம் தலைமை அஞ்சலகம், 3ம் தளத்தில் உள்ள சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில், சான்றிதழ்கள் உள்ளிட்ட விபரங்களுடன் பங்கேற்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். வயது வரம்பு இல்லை. ஆயுள் காப்பீட்டில் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், சுயதொழில், வேலை தேடும் இளைஞர்கள் பங்கேற்கலாம். தேர்வு பெற்ற முகவர்கள், சேலம் அஞ்சல் கிழக்கு கோட்டத்தின் கீழ் பணிபுரிய வேண்டும். அத்துடன், 5,000 ரூபாய் வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை