மேலும் செய்திகள்
அசுர வேக பஸ்சால் 8 பயணிகள் காயம்
18-Aug-2024
வாழப்பாடி : சேலம் அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே தேவாங்கர் காலனி பகுதியில், இன்று காலை 7:30 மணிக்கு, அரூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி தனியார் பஸ் சென்றுது. எதிரே வந்த ஈச்சர் டெம்போ திடீரென நின்றது. பின்னால் வந்த மற்றொரு ஈச்சர் டெம்போ, வலது புறம் கடக்க முயன்றது. இதனால், எதிர்புறத்தில் வந்த தனியார் பஸ் , டெம்போ மீது மோதியதுடன், சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பஸ் பயணிகள் 10 பேர் மற்றும் ஈச்சர் லாரி டிரைவர் காயமடைந்தனர். தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் அப்பகுதி மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
18-Aug-2024