உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெரியார் பல்கலை பதிவாளர் மீது பேராசிரியர் புகார்

பெரியார் பல்கலை பதிவாளர் மீது பேராசிரியர் புகார்

ஓமலுார் : சேலம் பெரியார் பல்கலை பொருளியல் துறை பேராசிரியர் வைத்தியநாதன், கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று அளித்த புகார் மனு:பெரியார் பல்கலை பேராசிரியர்களுக்கு, 'வாட்ஸாப்' குழு உள்ளது. அந்த குழுவில் கடந்த, 22 இரவு, 9:38 மணிக்கு, என்னை பற்றி வீடியோ ஒன்றை, பல்கலை பதிவாளர் தங்கவேல்(பொ) அவதுாறாக பதிவிட்டு சிறிது நேரத்தில் நீக்கியுள்ளார். இது என் தனிப்பட்ட வாழ்க்கை, பெயர், புகழுக்கு களங்கம் கற்பிக்கும்படி உள்ளதால் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இதுகுறித்து தங்கவேல் கூறுகையில், ''தவறுதலாக அக்குழுவில் 'டைப்' செய்துவிட்டு, உடனே நீக்கிவிட்டேன். ஆனால், உள்நோக்கத்தோடு குற்றம்சாட்டுகின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !