மேலும் செய்திகள்
மது அருந்திய இடத்தில் தொழிலாளிக்கு வெட்டு
31-Jan-2025
பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது.பனமரத்துப்பட்டி ஒன்றிய துணை செயலர் குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலர் செவந்தியப்பன், முன்னாள் ஒன்றிய செயலர் சுரேஷ் உள்-ளிட்டோர் பேசினர். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஆண்டுக்கு, 200 நாட்கள் வேலை, நாள் ஒன்றுக்கு, 600 ரூபாய் சம்-பளம் வழங்கவேண்டும். மல்லுார், பனமரத்துப்பட்டி டவுன் பஞ்-சாயத்து பகுதியில், 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஊராட்சி கரட்டூர் கிரா-மத்தில் இருந்து, சேலம்-திருச்சி நெடுஞ்சாலை வரை சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கல்குவாரிகளை மூடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை-களை வலியுறுத்தி கோஷமிட்டனர். மாவட்ட செயலர் கணபதி, ஜனநாயக வாலிபர் சங்க செயலர் கண்ணன் உள்ளிட்டோர் பங்-கேற்றனர்.
31-Jan-2025