உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ராகுல் பிறந்த நாள்: காங்., கொண்டாட்டம்

ராகுல் பிறந்த நாள்: காங்., கொண்டாட்டம்

சேலம்: காங்., முன்னாள் தலைவர் ராகுல் பிறந்தநாளையொட்டி சேலம் மாநகர, மாவட்ட காங்., சார்பில் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மாநகர மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் கட்சியினர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். சேலம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது. மாநகர பொருளாளர் ராஜகணபதி, பொதுக்குழு உறுப்பினர் ஷானவாஸ் உள்பட பலர் பங்கேற்றனர். பனமரத்துப்பட்டியில், சேலம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலர் செல்வகுமார் தலைமையில் நகர தலைவர் ராஜேந்திரன், கட்சி கொடி ஏற்றினார். மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தாரமங்கலத்தில் நகர தலைவர் சண்முகம் தலைமையில் கட்சியினர், சங்ககிரி சாலையில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டன.* ஓமலுாரில் காங்., கட்சியினர், பஸ் ஸ்டாண்டில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். முன்னாள் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடந்த விழாவில், பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மதியம் நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்