| ADDED : ஜூலை 16, 2024 02:03 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில், விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கும் பணி நேற்று துவங்கியது.மேட்டூர் அணை நீர்மட்டம், 43.22 அடியாகவும், நீர் இருப்பு, 13.80 அடியாகவும் இருந்தது. நீர் இருப்பு குறைவாக இருந்ததால் அணையில், 50 சதுர கி.மீ.,க்கு மேற்பட்ட நிலப்பரப்பு வறண்டு காணப்பட்டது. அணை வறண்ட நீர்பரப்பு பகுதியில், தேங்கி-யுள்ள வண்டல் மண்ணை இலவசமாக அள்ள அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்-தனர். அதனை தொடர்ந்து, நேற்று உரிய ஆவணங்களை வழங்-கிய விவசாயிகளுக்கு மேட்டூர் அணை மூலக்காடு நீர்பரப்பு பகு-தியில் வண்டல் மண் எடுக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.இதில், அணை உதவி பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் நீர்வளத்-துறை அலுவலர்கள் பங்கேற்றனர். விவசாயிகள் பொக்லைன் மூலம் வண்டல் மண்ணை தோண்டி எடுத்து டிராக்டர், லாரிகளில் ஏற்றி சென்றனர்.