உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தற்கொலை செய்துகொண்ட பெண் முகத்தில் காயம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

தற்கொலை செய்துகொண்ட பெண் முகத்தில் காயம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

தாரமங்கலம், தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் முகத்தில் காயம் உள்ளதால், அவரது கணவர் மீது சந்தேகம் தெரிவித்த உறவினர்கள், உடலை வாங்க மறுத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே ராமிரெட்டிப்பட்டி, உத்தன்டிவளவை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 28. இவர், 14 ஆண்டுக்கு முன், அதே ஊரை சேர்ந்த, லாரி டிரைவர் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரு மகன்கள் உள்ளனர். ஒரு மாதத்துக்கு முன் வேலைக்கு சென்ற குமார், கடந்த, 10ல் வீட்டுக்கு வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, பிரியதர்ஷினி மகன் மகிலேஷ்வர், அருகே உள்ள பாட்டி செல்வி வீட்டுக்கு சென்று, 'அம்மா கூப்பிடுகிறார்' என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பிரியதர்ஷினி வீட்டுக்கு, செல்வி வந்தார். அப்போது, படுக்கை அறை ஜன்னல் கம்பியில், லாரி பெல்ட்டால் துாக்கிட்டு, மகள் இறந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செல்வி புகார்படி, தாரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.'கணவரை கைது செய்'நேற்று மதியம், 3:00 மணிக்கு அடக்கம் செய்ய, ஆரூர்பட்டி பஸ் ஸ்டாப் பகுதிக்கு உடல் கொண்டு வரப்பட்டது.அப்போது உறவினர்கள், பெண் இறப்பில் சந்தேகம் உள்ளது என கூறி உடலை வாங்க மறுத்தனர். தாரமங்கலம் போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.அதை ஏற்க மறுத்த உறவினர்கள், 'பிரியதர்ஷினி முகத்தில் காயம் உள்ளதால், கணவர் குமாரை கைது செய்ய வேண்டும்.பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின் தான் உடலை வாங்குவோம்' என கூறி, மதியம், 3:30 மணிக்கு ஜலகண்டாபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சு நடத்தினர். பின், பிரியதர்ஷனி உடலை சவக்கிடங்கில் வைக்க அனுப்பி வைத்தனர். இதனால், 4:45 மணிக்கு, உறவினர்கள் மறியலை கைவிட்டனர். அதேநேரம் வாகனங்களை போலீசார் மாற்று வழியில் திருப்பிவிட்டதால், போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை