உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கழிவுநீரால் விவசாயம் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரிக்கை

கழிவுநீரால் விவசாயம் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரிக்கை

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாய்து சந்தைப்பேட்டையில் இருந்து, 10வது வார்டு வழியே தாசிக்காடு குட்டைக்கு கழிவுநீர் செல்கிறது. அங்கு, 10 ஆண்டுக்கு மேலாக கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்கி, பச்சை நிறமாகி துர்நாற்றம் வீசுகிறது. சில நாட்களாக பெய்த மழையால் குட்டை நிரம்பி, பெரமனுார் ஊராட்சி எல்லையில் உள்ள விவசாய வயல்களில் அதிகளவில் கழிவுநீர் பாய்கிறது.இதுகுறித்து வாத்திக்காடு, மானியக்காடு, பெரமனுார் பெண் விவசாயிகள் கூறியதாவது:பனமரத்துப்பட்டியில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர், வயலில் புகுந்து நிரம்பி நிற்கிறது. அரளி வயல் சேறு, சகதியாக மாறிவிட்டது. கழிவுநீரில் ஏராளமான பாம்பு, தேள் அடித்து வரப்பட்டு வயலில் கிடக்கின்றன. அரளி பூ பறிக்க செல்லவே அச்சமாக உள்ளது. வயலில் உள்ள சேற்றில் இறங்கி வேலை செய்தால் அரிப்பு, புண், சொறி, படை தொற்று ஏற்படுகிறது. கழிவுநீரால், 10 ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டு, தீபாவளி நெருங்கும் நேரத்தில் வருமானம் இழந்து நிற்கிறோம். வயலில் உள்ள செடிகள், மரங்கள், வேர் அழுகி மடியும் நிலையில் உள்ளன. விவசாய கிணறு, ஆழ்துளை குழாய் கிணறு நீர் கெட்டுவிட்டது. விளைநிலத்தில் கழிவு நீர் விடுவதை, கலெக்டர் தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை