உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் தவறி விழுந்த தம்பதி மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த தம்பதி மீட்பு

ஆத்துார் : விவசாய கிணற்றில் தவறி விழுந்த தம்பதியை, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர்.ஆத்துார் அருகே, ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 42. இவர் மனைவி கவிதாவுடன், 32, நேற்று இரவு, 7:00 மணியளவில் விவசாய கிணற்றின் வழியாக சென்றுள்ளனர்.அப்போது கால் தவறி இருவரும், 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்து, உயிருக்கு போராடினர். 7:30 மணியளவில் தகவல் தெரிந்த ஆத்துார் தீயணைப்பு துறை வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின், வெங்கடேஷ், அவரது மனைவி கவிதா ஆகியோரை உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ