மேலும் செய்திகள்
பட்டா கேட்டு மக்கள் சாலை மறியல்
13-Jun-2025
நங்கவள்ளி, நங்கவள்ளி, வீரக்கல் ஊராட்சி பாசக்குட்டையில், 100 ஏரி திட்டத்தில், பட்டா நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.இதில் பொன்னுமரத்துப்பட்டி, பூனையன்காட்டுவளவு, சீரான்காட்டு வளவு கிராமங்களுக்கு செல்லக்கூடிய தடம் மறைக்கப்படுவதாகவும், அதனால், 5 கி.மீ., சுற்றிச்செல்லும் நிலை ஏற்படும் எனக்கூறி, வருவாய்த்துறை, கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இதனால் நேற்று முன்தினம் மதியம், 12:15 மணிக்கு, பாசக்குட்டையில் கிராம மக்கள், மேட்டூர் - நங்கவள்ளி சாலையில், கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். நங்கவள்ளி போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
13-Jun-2025