உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே நடுவலுார் ஊராட்சி பள்ளக்காடு பிரிவு சாலையில், 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 2 வாரங்களுக்கு முன் ஆழ்துளை குழாய் கிணறு பழுதாக, குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று காலை, 8:00 மணிக்கு, ஆத்துார் - பெரம்பலுார் தேசிய நெடுஞ்சாலையில், காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். கெங்கவல்லி போலீசார் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், 9:00 மணிக்கு கலைந்து சென்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ