உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சங்ககிரி: சங்ககிரியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., லோகநாயகி, டி.எஸ்.பி., ராஜா தொடங்கி வைத்தனர். சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் தொடங்கிய ஊர்வலம், புதிய இடைப்பாடி சாலை, சந்தைப்பேட்டை, அரசு மருத்துவமனை சாலை, வி.என்.பாளையம், சேலம் பிரதான சாலை வழியே சென்று, ஆர்.டி.ஓ., வளாகத்தில் முடிந்தது.இதில், சங்ககிரியில் உள்ள, தனியார் கல்லுாரியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 'வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைப்பி டிக்க வேண்டும்; இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும்; வாகனங்களை ஓட்டும்போது மொபைல் போனில் பேசக்கூடாது' உள்ளிட்ட பல்-வேறு வாசகங்களைஏந்திச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை