மேலும் செய்திகள்
சாலை பணியாளர்கள் கையெழுத்து இயக்கம்
21-Jan-2025
மேட்டூர்: தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், கடந்த, 20 முதல் பிப்., 28 வரை, மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடத்துகின்றனர். இடைப்பாடி கோட்டத்தில் மேட்டூர் உபகோட்ட நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சார்பில், மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. மாநில துணைத்தலைவர் சிங்கராயன் தலைமை வகித்தார்.அதில் சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்க காலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி பணி காலமாக அரசு வழங்குதல்; மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் அரசே பராமரித்து நிர்வகித்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை ஆதரித்து, ஏராளமான மக்கள் கையெழுத்திட்டனர். கோட்ட இணை செயலர் மீனாட்சி-சுந்தரம், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலர் இளங்கோ, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலர் லீலாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
21-Jan-2025