சேலம்: பட்டா வழங்க, 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ., அவரது டிரைவரை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் கம்மாளப்பட்டி அருகே ஜல்லுாத்துப்பட்டியை சேர்ந்த குமாரின் மகன்கள் அஜித்குமார், அரவிந்த், 22. இவர்க-ளுக்கு அவரது தாத்தா செல்லமுத்து தானசெட்டில்மென்டாக, ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை வழங்கினார். அந்த நிலத்துக்கு பட்டா பெற, தும்பல்பட்டி வி.ஏ.ஓ.,வான, சேலம், 4 ரோடு, பெரம-னுாரை சேர்ந்த பாலம்மாள், 47, என்பவரிடம் விண்ணப்பித்தனர். இதற்கு நேற்று முன்தினம், வி.ஏ.ஓ., 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். அவ்வளவு தொகை இல்லை என அரவிந்த் கூறி-யுள்ளார். இதனால் வி.ஏ.ஓ., பேரம் பேசி, 15,000 ரூபாய் வழங்-கும்படி கூறியுள்ளார். மேலும் அந்த பணத்தை, அவரது கார் டிரைவரான, மணியனுாரை சேர்ந்த காமராஜ், 50, என்பவரிடம் வழங்கும்படி தெரிவித்தார். இதையடுத்து அரவிந்த், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அறிவுரைப்படி அரவிந்த், நேற்று மதியம், 2:00 மணிக்கு, ரசாயனம் தடவிய, 15,000 ரூபாயை, வி.ஏ.ஓ., அறிவுறுத்தல்படி, காமராஜிடம் வழங்கினார். அவர், பணத்தை காரில் கொண்டு போய் வைத்தார். அப்போது மறைந்தி-ருந்த, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார், பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பாலம்மாள், காமராஜ் ஆகியோரை கைது செய்தனர். பின் சேலம் லஞ்ச ஒழிப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் டிரைவரையும், பெண்கள் கிளை சிறையில், வி.ஏ.ஓ.,வையும் அடைத்தனர்.