உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.4.61 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரூ.4.61 கோடிக்கு ஆடுகள் விற்பனை

இடைப்பாடி: சேலம் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் கொங்கணாபுரம், வீரகனுார் பகுதியில் மொத்தம், 4.61 கோடி ரூபாயக்கு ஆடுகள் விற்பனையாகின.சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரச்சந்தைக்கு நேற்று ஏராளமான வியாபாரிகள், ஆடுகளை கொண்டு வந்தனர். அதற்கேற்ப வியாபாரிகள் குவிந்தனர். 10 கிலோ ஆடு, 6,500 முதல், 7,000 ரூபாய் வரை விலைபோனது. 3,900 ஆடுகள் மூலம், 2.85 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த வாரம், 10 கிலோ ஆடு, 6,300 முதல், 6,600 ரூபாய் வரை விலைபோனது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆடு வியாபாரிகள் சங்கத்தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''சந்தைக்கு அதிகளவில் ஆடுகளை கொண்டு வந்தாலும், விற்பனை எதிர்பார்த்தபடி இல்லை. பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடுகளை அதிகம் கொண்டு வந்ததால் விவசாய நிலங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் விற்பனையில் மந்தம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த வாரத்தை விட விற்பனை பரவாயில்லை,'' என்றார்.* தலைவாசல் அருகே வீரகனுாரில், சனிதோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. நேற்று சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 1,200க்கும் மேற்பட்ட ஆடுகள், 600 மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். புரட்டாசியும் முடிந்ததால் நேற்று கால்நடைகள் வரத்து அதிகளவில் இருந்தன. அதற்கேற்ப வியாபாரிகளும் குவிந்தனர். இதன்மூலம் ஆடுகள், 86 லட்சம், மாடுகள், 90 லட்சம் என, 1.76 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை