உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆட்சிக்குழு தேர்தல் வெற்றி பெற்றவர்கள் அமைச்சரிடம் வாழ்த்து

ஆட்சிக்குழு தேர்தல் வெற்றி பெற்றவர்கள் அமைச்சரிடம் வாழ்த்து

சேலம்: சேலம் பெரியார் பல்கலை ஆட்சிமன்றக்குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், உயர்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சேலம் பெரியார் பல்கலையின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் தேர்தல், சமீபத்தில் நடந்தது. முதல்வர்கள் தொகுதி, பேராசிரியர்கள் தொகுதி என இரு பிரிவாக தேர்தல் நடந்தது. பெரியார் பல்கலையின் தனியார், சுயநிதி கல்லூரிகளின் கூட்டமைப்பான 'பாசம்' அமைப்பினர் சார்பில், நான்கு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். முதல்வர்கள் தொகுதிக்கான தேர்தலில், சேலம் சவுடேஸ்வரி கல்லூரி முதல்வர் சிங்காரம், சேலம் வைஸ்யா கல்லூரி முதல்வர் வெங்கடேசன் ஆகியோர் போட்டியிட்டனர். பேராசிரியர்கள் தொகுதி தேர்தலில், மோகனூர் சுப்ரமணியம் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பழனியாண்டி, ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி மேலாண்துறை தலைவர் அருள் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், பாசம் அமைப்பின் சார்பில் போட்டியிட்ட நால்வரும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுடன், பாசம் அமைப்பின் தலைவர் ராஜேந்திர பிரசாத், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் ராஜவிநாயகம் ஆகியோர், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஆக 07, 2025 17:50

வரதட்சணை கேட்பதும் கொடுப்பதும் குற்றம் ஆனால் பையன் எந்த மாதிரி, எப்படிப்பட்டவன்னு யோசிக்காம, சொந்த வீடு இருக்கா, எவ்வளவு சம்பளம்னு பார்த்து வரதட்சணையோட பொண்ண கொடுத்துட்டு இப்ப அழுது என்ன பிரயோஜனம் சாமி. பிள்ளைகள தைரியமா வளர்க்கணும், அநீதிய எதிர்த்து போராட உயிரை மாய்ச்சுக்கொள்ள அல்ல.


சமீபத்திய செய்தி