2 ரயில் கட்டாக் போகாது சேலம் கோட்டம் அறிவிப்பு
சேலம்: ஒடிசா மாநிலம் கட்டாக் ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால் வரும், 16, 23, மார்ச், 2, 9, 16 ஆகிய நாட்களில், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியே செல்லும் கோவை - சில்சார் வார ரயில், வரும், 17, 18, 24, 25, மார்ச், 3, 4, 10, 11, 17 ஆகிய நாட்களில் கோவை, ஈரோடு, சேலம் வழியே செல்லும் எர்ணாகுளம் - பாட்னா ரயில் ஆகியவை, மாற்று வழியாக, பாரங்க், கபிலாஸ் சாலை வழியே இயக்கப்-படும். கட்டாக் ஸ்டேஷனுக்கு செல்லாது. இதற்கு பதில், நரஜ் மார்தாபூர் ஸ்டேஷனில் நின்று செல்லும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.